"பட்டாஸ்" ரிலீஸ் தேதியில் மாற்றம்.. நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ தகவல்

0 1950

நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொடி திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள, பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிகை சினேகா, தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மெஹ்ரீன் பிர்சாடா (Mehreen Pirzada) உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

முன்னதாக பொங்கல் விடுமுறையையொட்டி வரும் ஜனவரி 16-ம் தேதி,பட்டாஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்"பட்டாஸ்"திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் ஜனவரி 15-ம் தேதி உலகம் முழுவதும் "பட்டாஸ்" வெளியாகும் என, நடிகர் தனுஷ் ட்விட்டரில் கூறியுள்ளார். சொன்னதற்கு ஒரு நாள் முன்னதாகவே பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளதால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments